Monday, January 14, 2013

இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் ஆலோசகருமான மொஹான் பீரிஸ், நாளை செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

Monday, January 14, 2013
இலங்கை::இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் ஆலோசகருமான மொஹான் பீரிஸ், நாளை செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என்று அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களிலிருந்து தெரியவருகிறது.

தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்குவதாக ஜனாதிபதியினால் அவருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு தகுதியானவர்கள் என மொஹான் பீரிஸ் உட்பட மூவரது பெயர்கள் நாடாளுமன்ற பேரவையிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

18ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்திலேயே புதிய பிரதம நீதியரசரின் பெயரை இந்த பேரவை சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment