Saturday, December 8, 2012

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு திட்டமிட்டவாறு நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது!

Saturday, December 08, 2012
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு திட்டமிட்டவாறு நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடாத்தப்பட உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் சகலத் தலைவர்களையும் ஏனைய பிரதிநிதிகளையும் வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உறுப்பு நாடு என்ற வகையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிராம அபிவிருத்தி, இளைஞர் அபிவிருத்தி, சமூகப் பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் n;தாடர்பில் பொதுநலவாய நாடுகளின் கருத்துக்ளை பரிமாறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment