Monday, December 10, 2012

மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை: ஜிதேந்திரா சிங்!

Monday, December 10, 2012
சென்னை::இந்திய இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மக்களவையில் இன்று (10.12.2012) கேள்வி நேரத்தின்போது கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கேரள எம்பி அணிருத்தன் கேள்வி எழப்பினார்.

இதே கருத்தை முன்மொழிந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், இலங்கை தமிழகம் இடையே மீன் பிடிக்க மீனவர்கள் அவ்வப்போது கடலுக்குள் செல்கின்றனர். எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவம், மீனவர்களால் தாக்கப்படுகின்றனர். இலங்கை தமிழக மீனவ பிரதிநிதிகள் இடையே எப்போதாவது பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதா. இதனை தடுக்க மத்திய அரசு இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றார்.

கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரா சிங், தமிழ்நாடு, இலங்கை இரு நாட்டின் கடல் எல்லைகளும், அருகருகே உள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் எல்லை தாண்டு:ம மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். சுஷ்மா அவர்கள் கூறியது போல மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment