Monday, December 10, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது - சரத் வீரசேகர!

Monday, December 10, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என ஓய்வு பெற்ற ரியர் அட்மிராலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற கருத்து நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி  புலிகளின் நிழற் கட்சியாக செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை இராணுவத்தினர் துன்புறுத்துவதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதாகவும், உண்மையில் யார் தமிழ் மக்களை துன்புறுத்தினார்கள் என கேள்வி எழுப்பி விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோரை யார் படுகொலை செய்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கண்டிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment