Tuesday, December 11, 2012

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை: பெங்களூர் கோர்ட்டில் சசிகலா நேரில் ஆஜர்!

Tuesday, December 11, 2012
பெங்களூர்::வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே, இந்த வழக்கை நடத்தி வந்த நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றதை அடுத்து புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்பெற்றுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. இதில் சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்படாத ஆவணங்கள் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக புதிய நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் முதல் முறையாக சசிகலா இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

பயன்படுத்தப்படாத ஆவணங்கள் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற சசிகலாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பின்னர், வழக்கு விசாரணை 19-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று நீதிபதியின் கேள்விகளுக்க சசிகலா பதில் அளிக்கிறார்.

No comments:

Post a Comment