Tuesday, December 11, 2012

தமிழ் தேசியக் (புலி) கூட்டமைப்பின் தீவக இளைஞரமைப்பு இணைப்பாளரான நிசாந்தனின் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு!

Tuesday, December 11, 2012
இலங்கை::தமிழ் தேசியக் (புலி) கூட்டமைப்பின் தீவக இளைஞரமைப்பு இணைப்பாளரான நிசாந்தனின் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

யாழ், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். நிசாந்தனின் வீட்டை இலக்கு வைத்து  திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசியுள்ளனர்.யாழ். வைமன் வீதியிலுள்ள இவரின் வீட்டை இலக்கு வைத்தே இனந்தெரியாத நபர்களினால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனினும் இந்த கைக்குண்டு மரத்தில் பட்டு வெடித்தமையினால் முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கோ அவரின் வீட்டுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

ஈபிடிபி சார்பில் கடந்த யாழ்.மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட நிசாந்தன் பின்னர் அவர்களுடன் முரண்பட்டு சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனுடன் இணைந்து கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி தமிழ் தேசியக்  (புலி)கூட்டமைப்பின் தீவக இளைஞரமைப்பு இணைப்பாளராக செயற்பட்டு வந்திருந்தார்.

No comments:

Post a Comment