Wednesday, December 05, 2012
புதுடில்லி::"பிரான்சின், "டஸ்சால்ட் ஏவியேஷன்' விமான நிறுவனத்திடம் இருந்து, 126, நடுத்தர ரக, போர் விமானங்களை வாங்க உள்ளோம்; இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என, ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.எம்.பி., ஒருவருக்கு, அமைச்சர் அந்தோணி எழுதியுள்ள கடிதத்தில், கூறப்பட்டுள்ளதாவது:-
விமானப்படை விமானிகளுக்கு, பயிற்சி அளிப்பதற்காக, டோர்னியர் ரகத்தை சேர்ந்த, 14 விமானங்கள், இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும். அதுபோல, கடற்படையும், எச்.ஏ.எல்., நிறுவனத்திடம் இருந்து, 12, டோர்னியர் ரக விமானங்களை வாங்க உள்ளது.பிரான்சின், "டஸ்சால்ட் ஏவியேஷன்' விமான நிறுவனத்திடம் இருந்து, 126, நடுத்தர ரக, போர் விமானங்களை வாங்க உள்ளோம். இதற்கான, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.நிலத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தவும், வான்வெளி தாக்குதலை சமாளிக்கவும் திறன் படைத்த, நீர்மூழ்கி கப்பல்களை கட்ட, ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திராவின், கார்வார், கடற்படை தளத்தை விரிவாக்க, இந்திய நிறுவனங்கள் எதுவும், இதுவரை முன்வரவில்லை. முன்வந்த நிறுவனங்கள், போதிய நிதி தகுதி, செயல் திறன் படைத்ததாக இல்லை.இந்திய கடலோரம் முழுவதும், கண்காணிப்பு பணிகளுக்காக, 46, ரேடார் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை, மத்திய அரசு வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு, மார்ச் முதல், திட்டம் செயல்படுத்தப்படும்.பொதுத் துறையை சேர்ந்த, எச்.ஏ.எல்., நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் பரிந்துரைகளின் படி, இன்னும், ஆறு மாதங்களில், அப்பணி மேற்கொள்ளப்படும்.ராணுவ அதிகாரிகள் தேர்வாணையமான, எஸ்.எஸ்.பி.,யை, மேலும், ஏழு இடங்களில் அமைக்க உள்ளோம். அதில், இரண்டு ராணுவத்திற்கும், மூன்று, கடற்படைக்கும், இரண்டு, விமானப்படைக்கும் அதிகாரிகளை தேர்வு செய்யும்.விளையாட்டு வீரர்களுக்கு, ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்படுவது குறித்து, எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. பிரபலமான வீரர்களுக்கு, கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.
கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கருக்கு, விமானப்படையின், குரூப் கேப்டன் பதவியும், துப்பாக்கி சுடும் வீரர், அபினவ் பிந்த்ரா மற்றும் கிரிக்கெட் கேப்டன், தோனிக்கு, பிரதேச ராணுவ படை பிரிவில், கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்....
எல்லையில் கண்காணிப்பு: லோக்சபாவில் அமைச்சர் உறுதி:-
எல்லையில் சீன ராணுவத்தின்நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன,'' என,ராணுவ அமைச்சர், அந்தோணிகூறினார். லோக்சபாவில், அவர்கூறியதாவது: நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான, எல்லைப் பாதுகாப்பில் மிகுந்த கவனமாக உள்ளோம். சீனாவுடனான எல்லையில், அந்நாட்டின்ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பை உறுதி செய்வதற்கானஅனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளோம்.
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த, ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும், ராணுவத்திற்கு மட்டுமான, விசேஷ ரயில்வே பாதை அமைப்பது குறித்துதிட்டம் வரையப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம்உதவியுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் அந்தோணி கூறினார்.

No comments:
Post a Comment