Thursday, November 29, 2012

இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை அடுத்த வருடம் நடுப்பகுதியிலிருந்து இயக்குவதற்கு துரித நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை!

Thursday, November 29, 2012
இலங்கை::அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை அடுத்த வருடம் நடுப்பகுதியிலிருந்து இயக்குவதற்கு துரித நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்தவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலின்போதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்போது கடந்த கால யுத்தத்தால் முற்றாக அழிவடைந்த அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்திய அரசின் நிதியுதவியுடன் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்ற வருகின்றன.

இதன்பிரகாரம் உட்கட்டுமான ஆரம்பக்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய புனரமைப்புப் பணிகளை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து யூன் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தி கைத்தொழில் பேட்டையை விரைவில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறாக அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை புனரமைக்கப்பட்டு இயங்கும் பட்சத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.;ஜெகராஜசிங்கம், இந்திய உயர்ஸ்தானிகராலய பொருளாதாரத்துக்கான பேரவை உறுப்பினர்கள் யு.என்.ஒ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள், திறைசேரியின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment