Monday,November 05, 2012
இலங்கை::பொலன்நறுவை மன்னம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலன்நறுவை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
8 கிலோ கிராம் எடைகொண்ட இந்த கிளைமோர் குண்டு, மன்னம்பிட்டி கொலனி வீதியில் உள்ள யோகேஸ்வரன் தர்மலிங்கம் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தோட்டத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது, குண்டு இருப்பதை அவதானித்த அவர், இது குறித்து காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, மின்னேரிய இராணுவ முகாமைச் சேர்ந்த குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் உதவியுடன் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
கிளைமோர் குண்டை அந்த இடத்திற்கு கெபண்டு சென்றவர் யார் என்பதை கண்டறிய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment