Friday, November 02, 2012
இலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கினால் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் நிதி அதிகாரங்களைத் தவிர்ந்த காணி, காவல்துறை உள்ளிட்ட சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளது
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும், மத்திய அரசாங்கத்திற்கே கூடுதல் அதிகாரங்கள் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளினால் பயன்படுத்த முடியவில்லை என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு வழங்காவிட்டால் இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமை குறித்து அறிவிக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment