Friday, November 02, 2012
மெல்போர்ன்::ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் ரகோத்தமன், இந்த கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை எம்.கே.நாராயணன் மறைத்ததாக கூறியிருந்தார்.
மேலும் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அவர் எழுதிய ‘ராஜீவ் காந்தியை கொல்ல சதி’ என்ற புத்தகத்திலும் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் புலிகளினால் ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்பு பொதுக்கூட்டத்தில் தணு இருந்ததை உள்ளூர் வீடியோகிராபர் ஒருவர் படம் பிடித்திருந்தார். அதனை உளவுத்துறை அதிகாரியாக இருந்த எம்.கே.நாராயணன் மறைத்துவிட்டார் என்று ரகோத்தமன் தனது புத்தகத்தில் எழுதியிருந்தார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை எம்.கே. நாராயணன் மறுத்துள்ளார். தற்போது மேற்கு வங்க ஆளுநராக உள்ள எம்.கே. நாராயணன் ஆஸ்திரேலியா சென்றபோது, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நாராயணன், ‘எனக்கு ஒன்றும் தெரியாது. தனது புத்தகம் விற்பனையாக வேண்டும் என்பததற்காக ரகோத்தமன் இவ்வாறு பேசியிருப்பதாக நினைக்கிறேன். ராஜீவ் கொலை தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. இதுதொடர்பாக புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை’ என்றார்.

No comments:
Post a Comment