Monday, November 5, 2012

51 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் - பசில் ராஜபக்ஷ!

Monday,November 05, 2012
இலங்கை::அரசாங்கத்தில் தற்போது பயிற்சி பெறுகின்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நிரந்தர தொழில்வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களில் தற்காலிகமாக தொழில் புரிந்த பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 51ஆயிரத்து 420 பட்டத்தாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த தினத்தில் இடம்பெற்றது.

தெரிவான பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment