Wednesday, November 07, 2012
இலங்கை::2012 ஆம் ஆண்டின் 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்று புலமைப் பரிசில் பெற்றுக் கொண்ட மாணவர்களை கொரவிக்கும் முகமாக யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துறுசிங்க அவர்களது வழிகாட்டலில் யாழ் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவானது இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணம் சிவில் அலுவல்கள் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ் மாவட்டத்திலிருந்து 8937 பரிட்சார்த்திகள் பரிட்சைக்கு தோற்றியதுடன் இவர்களில் 1027 பேர் புலமைப் பரிசிலுக்கான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர். ஒக்டோபர் 31ம் திகதி காலை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருக்கம் சிவில் அலுவல்கள் மற்றும் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற பரிசில் வழங்கும் நிகழ்வில் சித்தியடைங்தவர்களில் முதல் 26 பேர் பெருமதியான பரிசில்களைப் பெற்றுக் கொண்டதுடன் இவர்கள் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் யாழ் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தால் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் போது பாடசாலை புத்தகப் பை. சிறிய பயணப்பை, குடையொன்று, அகராதியொன்று மற்றும் கற்றல் உபகரணங்களைக் கொண்ட 4000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பரிசுப் பொதியொன்றும் அனைத்து மாணவர்களும் பெற்றுக் கொண்டனர். அன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் 10,000 ரூபா வைப்பு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகமும், இரண்டாம் இடத்திற்காக சம பள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் இருவருக்கு 5,000 ரூபா வைப்பு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகமும் ஏனைய மாணவர்கள் 22 பேருக்கும் 2,500 வீதம் ரூபா வைப்பு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகமும. பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துறுசிங்க அவர்களதும் ஏனைய விருந்தினர்களதும் கரங்களால் வழங்கிவைக்கப்பட்டது.
வட பிராந்திய கல்வித் திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் பி.விக்னேஸ்வரன் தனது நன்றியுரையின் போது யாழ்ப்பாணத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக இலங்கை இராணுவம் 1996ம் ஆண்டிலிருந்து வழங்கிய ஒத்துழைப்பு பற்றி ஞாபகப் படுத்தியதுடன் கீரிமலையில் இருந்து வசாவிளான் பாடசாலை வரை 07 பாடசாலைகளை மீளத் திறப்பதற்காக உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிப்பதற்கு தற்போதைய கட்டளைத் தளபதி வழங்கிய ஒத்துழைப்பு பற்றியும் ஞாபகமூட்டினார். மீள் குடியேற்றம் முழுமையானதன் மூலம் வடமராட்சி பிரதேசத்தில் அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்காக இராணுவத்தினர் வழங்கிய ஒத்துழைப்ப பற்றியும் பாராட்டுத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் தனியார் நிறுவனங்களான சம்பத் வங்கி, இந்தியன் வங்கி, டயலொக் நிறுவனம், மொபிட்டெல் நிறுவனம், ராஜா கிறீம் ஹவுஸ், யாழ் பென்சி மஹால், ஆசிர் வணிக நிலையம், ஐங்கரன் ஸ்ரோஸ், மணி கலர் பிரின்டர்ஸ், வணிக சபை மற்றும் கொடையாளர்களான ஏ அருள்ஜோதி, ஸ்ரீ கந்தராஜா ஆகியோர் பிரிசில்களை வழங்குவதற்காக அனுசரணை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.





No comments:
Post a Comment