Sunday, November 04, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பூகோள காலக்கிரம மீளாய்வு மாநாட்டில் சமர்பிக்கப்பட்டுள்ள 46 விசாரணை அறிக்கைகள் குறித்து தீர்மானிப்பதில் உலக நாடுகள் இரண்டாக பிரிந்துள்ளதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.
இந்தியா, ஸ்பெயின், பேனின் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், இந்த தீர்மானித்தை எதிர்வரும் 5 ஆம் திகதி அறிவிக்க உள்ளனர். இந்த விடயத்தில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வடகொரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மீளாய்வு மாநாட்டிற்கு புலிகளுக்கு ஆதரவான 11 அமைப்புகளும், இலங்கையை சேர்ந்த 17 அரசசார்ப்றற அமைப்புகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகளே அறிக்கையை சமர்பித்துள்ளன.
புலிகளின் உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்முhனுவேல், தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மற்றும் இலங்கையை சேர்ந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் 7 பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க ஜெனிவா சென்றுள்ளனர்.
அதேவேளை இலங்கைக்கு எதிராக செயற்படுமாறு வலியுறுத்தி புலிகளின் ஆதரவாளர்கள், 50 ஆயிரம் குறுந்தகவல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்க இலங்கை பிரதிநிதிகள் தயாராக இருப்பதாகவும் திவயின கூறியுள்ளது.


No comments:
Post a Comment