Sunday, November 04, 2012
சென்னை::இலங்கையில் பொது வாக்கெடுப்பு லண்டனில் வற்புறுத்த தி.மு.க., முடிவு: (23ம் புலிகேசி) கருணாநிதி பேட்டி!
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்குவது, பொது வாக்கெடுப்பில் முடிவாகும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி:
இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்காக, "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தி.மு.க., கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை, ஐ.நா., துணை பொதுசெயலர் மற்றும் ஐ.நா., மனித உரிமை ஆணையத்திடம், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், பார்லிமென்ட் குழு தலைவர், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கு முன், 1961ல், தூத்துக்குடி தி.மு.க., பொதுக்குழுவில், இலங்கை தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம், 1985ல் நடத்தப்பட்ட, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நகல்கள் ஆகியவற்றை, ஐ.நா., சபைக்கு அனுப்பியுள்ளோம்.
இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய, "சிடி'யையும் ஐ.நா., சபையில் அளித்துள்ளோம். இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய ஒளியை இம்முயற்சி ஏற்படுத்தும் என, நம்புகிறோம்.
ஐ.நா., சபையிடம் ஒப்படைத்துள்ள ஆவணத்தில், "இலங்கை தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மறுவாழ்வை முடிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளோம். பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி, மத்திய அரசுக்கு நன்கு தெரியும். எனவே, இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை, "டெசோ' மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெறவில்லை.ஆனால், இலங்கை தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் மத்தியில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில், தனி நாடு உருவாகலாம். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, லண்டனில் நடைபெறும் இலங்கை தமிழர்கள் மாநாட்டிலும் வலியுறுத்துவோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.



No comments:
Post a Comment