Wednesday, November 28, 2012

புலிகளுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியன் டொலர்கள்(10 ஆயிரம் கோடி ரூபா)!!

Wednesday, November 28, 2012
இலங்கை::புலிகளுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியன் டொலர்கள்(10 ஆயிரம் கோடி ரூபா) என விடுதலைப்புலிகள் அமைப்பின், ஆயுத விநியோக வலையமைப்பின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன், இலங்கை அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர் கே.பியிடம் நடத்திய விசாரணைகளின் போது,  அவர் இந்த சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். கனடா, சுவிசர்லாந்து, மலேசியா, பிரித்தானியா, நோர்வே,  பிரான்ஸ், சுவிடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றில் அதிகளவான சொத்துக்கள் கனடாவில் உள்ளன.

பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள்,  வாகன விற்பனை நிலையங்கள், லீசிங் நிறுனங்கள் என பல்வேறு வர்த்தக நிலையங்கள் இந்த சொத்துக்களில் அடங்குவதாக தெரியவந்துள்ளது.  இந்த வர்த்தக நிறுவனங்கள்  புலிகளின் செயற்பாட்டாளர்களின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 30 வீதமான சொத்துக்களின் பங்குகள் விடுதலைப்  ஆதரவான அமைப்புகளுக்கு கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment