Wednesday, October 03, 2012
இலங்கை::வட மத்திய மாகாண சபையின் புதிய தலைவரை தெரிவு செய்ய நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் ஆளும் கட்சி தோல்வியடைந்துள்ளது.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள மாகாண சபை கூட்ட மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அங்குரார்ப்பண அமர்வில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அமரகீர்த்தி அத்துகோரள ஆளும் கட்சியினால் சபை தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டார்.
எதிர்க்கட்சி சார்பில் பீ.எம்.சிறிபாலவின் பெயர் முன்மொழியப்பட்டது. இதன் பின்னர், நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் 32 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆளும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 வாக்குகளும் எதிர்க்கட்சியினால் நிறுத்தப்பட்ட சிறிபால 21 வாக்குகளையும் பெற்றார்.
இதனை தொடர்ந்து 11 மேலதிக வாக்குகளை பெற்ற சிறிபால சபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
வடமத்திய மாகாணத்தில் ஆளும் கட்சிக்கு 20 ஆசனங்களும் எதிர்க்கட்சிக்கு 13 ஆசனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment