Tuesday, October 02, 2012
இலங்கை::25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறும் நோக்கில், நாரம்மல பகுதி வைத்தியரொருவரை கடத்தியதாக கூறப்படும் மற்றுமொரு வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு வைத்தியரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாரம்மல பகுதியில் குறித்த வைத்தியர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர்களால் கடத்தப்பட்ட வைத்தியர் அவிசாவளை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், அவர் ஐந்து இலட்சம் ரூபா காசோலை வழங்கியதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மிகுதிப் பணத்திற்காக வைத்தியரின் காரை வழங்குமாறு கப்பகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காரை கேகாலை பகுதிக்கு கொண்டுவருமாறும் அவர்கள் வைத்தியரிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வைத்தியர் சாதுர்யமான முறையில், மற்றுமொரு குழுவுடன் காரை கொண்டுசெல்வது போல், கேகாலை பகுதிக்குச் சென்று கடத்தற்காரர்கள் இருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளார்...
கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர் கதிர்காமத்தில் கடத்தப்பட்டுள்ளார்!
கதிர்காமத்தில் வைத்து கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடத்தல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தமது மனைவியுடன் கதிர்காமத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கடத்தல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment