Friday, October 26, 2012
சென்னை::உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 47.60 ஏக்கர் நிலத்தில் 2,673 வீடுகள், ரூ.455.50 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை 10 மணிக்கு, மேலக்கோட்டையூரில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக காவல் துறை டிஜிபி ராமானுஜம் வரவேற்புரை ஆற்றினார். தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
‘உங்கள் சொந்த இல்லம்’ திட்ட வீடுகளுக்கு அடிக்கல் நாட்டியும், சீருடை பணியாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டு ஆணையை வழங்கியும் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: காவல் பணி என்பது கடினமான பணி. ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டுமானாலும், அதற்கு இன்றியமையாததாக விளங்குவது காவல் துறையின் பணியாகும். பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளிப்பது மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரமும், மனநிறைவும் அளிக்கும் மகத்தான பொறுப்பு காவல் துறையிடம்தான் இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,12,363 காவல் பணியாளர்களில் 50,424 பேருக்கு குடியிருப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது.
7,526 பேருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள அனை வருக்கும் குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும். தமிழகம் முழுவதும், இந்த திட்டம் ஆங்காங்கே விரைவாக செயல்படுத்தப்பட்டு அனைத்து சீரூடை பணியாளர்களும் தங்கள் பணி காலத்திலோ அல்லது ஓய்வு காலத்திற்கு பிறகோ சொந்த இல்லத்தில் வாழ்கின்ற நிலை ஏற்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். விழாவில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம் நன்றி கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவர் போலாநாத், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment