Friday, October 5, 2012

யாழில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு சாரதிகளும் பலி; நால்வர் காயம்!

Friday, October 05, 2012
இலங்கை::யாழ்.இருபாலைச் சந்தியிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று பிற்பகலர் 1 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த யாழ்ப்பாணம் - தங்கால்லை தனியார் பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் இரு பஸ்களினதும் சாரதிகள் கடும் காயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த சிறுபிள்ளையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

No comments:

Post a Comment