Saturday, October 27, 2012

அரசியல் தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பு தமது தரப்புக்கெதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் உரிய வகையில் பதிலளிக்கப்படும் - சம்பந்தன்!

Saturday, October 27, 2012
இலங்கை::அரசியல் தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பு தமது தரப்புக்கெதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் உரிய வகையில் பதிலளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இழுத்தடிப்புப் போக்கைக் கடைப்பிடிக்குமானால் தீர்வு விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் அரசு தள்ளப்படும் என அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுமுன் தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கெஹலிய போன்றோர் வெளியிடும் கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கில்லை. இருப்பினும், உரிய நேரத்தில் உரிய வகையில் இவற்றுக்கு நாம் பதிலொன்றை வழங்குவோம் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment