Wednesday, October 03, 2012
புதுடெல்லி::மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜ மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு சர்வமத பிரார்த்தனை நடந்தது.
நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காந்தி படத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங். மக்களவை சபாநாயகர் மீரா குமார். உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அத்வானி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் நேற்று கொண்டாடப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள சாஸ்திரியின் படத்துக்கு பிரதமர் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.


No comments:
Post a Comment