Tuesday, October 2, 2012

திரும்பத் திரும்ப அடிவாங்கித் தரவாரார் சுரேஸ் பிறேமச் (பகுதி-1)!

Tuesday, October 02, 2012
இலங்கை::தன்வினை தன்னைச்சுடும் எண்டு சொல்லுவினம்  அதுசரிதான் சுரேஸ் பிறேமச் அண்ணையின்ட அழுகையிலை தெரியுது கண்டியளோ. சம்பந்தன் ஐயா சங்காரம் செய்துபோட்டாராம். சம்பந்தன் ஐயாவே பழுத்த அரசியல்வவாதி  அவரிட்டபோய் அரசியல் சித்து விடலாமா? சுரேஸ் பிறேமச் பற்றி நல்லாவே அறிஞ்சு வச்சிருக்கிறார் மனுசன்காணும்.
சுரேஸ் பிறேமச் புகுந்த இடத்திலை எல்லாம் பிரப்ளம் காணும் எந்தக் கட்சியைத்தான் விட்டுவைச்சார் இந்த பிறேமச் அதுதான் வைக்கவேண்டிய இடத்திலை வைச்சிருக்கிறார் சம்பந்தன் ஐயா கண்டியளோ. அதுக்காக இவையள் சரியோ பிழையோ எண்டது அல்ல முக்கியம்.
அவையள் வளர்த்த கட்சிக்குள்ளபோய் குறஸ்பண்ணி அட்வைஸ் பண்ண யார்தான் அக்ஸ்சப்ட் பண்ணுவாங்க கஸ்டப்பட்டு கறையான் புத்து எடுக்க கருநாகம் குடிகொள்ளவோ? அவையளே அப்புக்காத்துமார் அவையளுக்கு போய் அட்வைஸ் பண்ண சும்மாபோங்க சுரேஸ் பிறேமச் உங்களுக்கு இது ரொம்ப வம்பாத்தெரியல்ல?
ரி.என்.ஏ கட்சிக்குள்ள மற்றவர்களை மடக்கிப்போட்டு அதுக்குள்ள பெரிய பதவியைப்பிடிக்கப்பார்க்கிறார் மனிசன் அல்லாட்டிக்கு இவரின்ட தலைவரான தோழர்பத்மநாபா உட்பட ஆயிரக்கணக்கான உறுப்பினர்களையும் புலிகள் வேட்டையாடியபிறகும் அந்த புலிகள் இயகக்குத்துள்ள புகுந்து எம்.பி; பதவி எடுத்தவர் எண்டா நினைச்சுப்பாருங்கோவன் அந்த பத்மநாபா மனிசன் இந்த பிறேமச்சுக்கு மதிப்புகுடுத்து வைச்சிருந்தவர் ஆனா இந்த எம்.பி; பதவிக்காக தன்ட தலைவர் பத்மநாபாவின்ட கொல்லப்பட்ட உடலை மிதிச்சுக்கொண்டு புலிகளிட்டை பதவியை எடுத்தவர் எண்டா இவரின்ட கரக்டரை அறிஞ்சுகொள்ளுங்கோவன். கொடுமையைக்கண்டு கண்டு பயம் எதற்கு உண்மையைச்சொல்லி நன்மையைச்செய்யவேணும் சுரேஸ் பிறேமச்சின்ட பழைய சித்து விளையாட்டுக்களை சொல்லித்தான் ஆகவேணும் இது காலத்தின் கட்டாயம் அண்டைக்கு பத்மநாபாத்தோழருக்கு பிழையான தகவல்களைகுடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் எப்பை பிரிச்சபெருமை சுரேஸ் பிறேமச் அண்ணையைத்தான் சேரும்  அதைக்கொஞ்சம் விளக்கத்தான்வேணும்   இந்தியாவிலை இருந்துகொண்டு காலையிலை ஈ.பி.ஆர்.எல்.எப் ஒபிசுக்கு வந்து கசங்காதசேட்டும் போட்டுக்கொண்டு  காட்ஸ்விளையாடும் ஒருவிடுதலை இயக்க மத்தியகுழு உறுப்பினர் என்றால்  இவராகத் இருக்கும் இவர் அப்பிடி இருக்கேக்க இயக்கம் எப்பிடி வளரும்?
யோசிச்சுபாருங்கோ 1983 ஆண்டிலை ரெயினிங்குக்கு ஆட்களை அளவுகணக்கில்லாமல் அள்ளிப்போட்டு அவையளுக்கு ஒருநேர சாப்பாடு குடுக்க ஏலாம இருக்கேக்க இவரோ காயா இருந்துகொண்டு காட்ஸ்விளையாடினா  ரெயினிங்குக்கு  வந்தவையளுக்கு யாருகாணும் சாப்பாடு குடுக்கிறது. அதுவும் இளம்பெடியல்கள் என்ன செய்தாங்கள் பலர் தப்பி ஒடினாங்க சிலர் முகாமிற்குள்ளேயே ரகளை பண்ணிணாங்க. மத்தியகுழு உறுப்பினரும் இராணுவத்திற்கு பொறுப்பான டக்ளஸ் தேவானந்தா என்ன சொன்னார் தெரியுமா? நாங்கள் விமர்சனம் சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்க வேண்டியநேரமில்லைஇது. செயலில் இறங்கி ரெயினிங்குக்குகாம்பில் உள்ளவர்களுக்கு அவசரமாக பசிக்கு சாப்பாடு குடுக்கவேணும் அல்லாவிட்டால் ரெயினிங்குக்குகாம்பில் உள்ளவர்கள் எல்லோருமே பசியினால் தப்பிஒடிவிடுவார்கள் என்று செயலில் இறங்கினார் அந்த மனிசன் டக்ளஸ்தேவானந்தா  ரெயினிங்காம்பில கூட்டம் நடாத்தி ஓரு விசயத்தை சொன்னார் உங்களுக்கு வீட்டில நல்ல உடை நல்ல உணவு கிடைத்திருக்கும் ஆனால் ஓரு இலட்சியத்துக்காக படகு எறி கஸ்டப்பட்டு இங்க வந்து இருந்திருக்கிறியள் உங்கள் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்னை நம்புங்கள் ஓத்துழைப்பு கொடுங்கள் என்று கூறி அவர்களை அமைதிப்படுத்தினார்.
பின்னர் கும்பகோணம் ரெயினிங்குக்குகாம்பிற்கு அருகில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் சென்று ஈழப்போராளிகள் நாங்கள்  பயிற்சியில் உள்ள பையன்களுக்கு உணவுத்தேவைக்கு ஏதும் தரமுடியுமா? அவர்களும் மூட்டைமூட்டையாக நெல்லைக் கொடுத்தார்கள் நெல்லுகிடைத்ததேபோதும் என்ற திருப்தி அடைந்த நிலையிலும் அதை அரிசியாக்கக்வேண்டுமே அதற்கு பணம்வேண்டுமே என்ன செய்வது மில்முதலாளிகளிடம் உதவி கேட்டு இலவசமாக அரைத்து அரிசியாக்கி பட்டினி கிடந்தவர்களுக்கு கஞ்சியும் சோறும் கிடைக்கஆவணசெய்தார்.
ரெயினிங்குக்குகாம்பிலே அவர்களிடம் ஓன்றாக இருந்து அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொண்டதால் ரெயினிங்குக்குகாம்பில் உள்ளவர்கள் டக்ளஸ் தேவானந்தாவை பாசத்துடன் அப்பா அப்பா என்று அழைத்தார்கள். இயக்கத்தை வளர்க்கவேண்டும் என்ற தனது கடுமையான உழைப்பால்  ரெயினிங்குக்குகாம்பிலும் ஏனைய இயக்கத்தோழர்கள் மத்தியிலும் அவர்மீது தனிப்பட்டமதிப்பு ஏற்பட்டது. தளத்தில் மக்கள் மத்தியில் கஸ்டப்பட்டு விசுவாசமாகவேலை செய்தவர்களையும் முன்னிலைப்படுத்தி பொறுப்புக்களை கொடுத்தார்.
இதனைபொறுக்கமுடியாத சுரேஸ் பிறேமச் கிளிநொச்சி பொலிஸ் நிலைய தாக்குதலை டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியாமல் தானே தலைமையேற்று நடாத்தி தோல்வியில் விட்டு விட்டு ஒடிவந்துவிட்டார். அதேபோல டக்ளஸ் தேவானந்தா காரைநகர் கடற்படைமுகாமைத்தாக்க நன்கு திட்டமிட்டு பயிற்சிபெற்ற உறுப்பினர்களுடன் அதற்கு உரிய ஆயுதங்களுடன் இந்தியாவில் இருந்து வருவதற்குள் இதனை அறிந்த சுரேஸ் பிறேமச் அரைகுரை தயாரிப்புடன் அவசரப்பட்டு அந்த முகாமைத் தாக்கி தோல்விகண்டார் இந்த சுரேஸ் பிறேமச்சின் சிறுபிள்ளைத்தனமான இராணுவ  நடவடிக்கைகள் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதுமட்டுமல்லாமல் தமிழ்மக்களின் விடுதலைக்கான வெற்றிப்படிகளை புரட்டி புரம்தள்ளியது.
இப்படியாக டக்ளஸ் தேவானந்தாவை ஒரம்கட்டும் முயற்சியில் இறங்கி சதிவேலைகளில் ஈடுபட்டது மட்டுமல்ல நிலையில்  ஆரம்பத்தில் இருந்து கஸ்டங்களுக்கு மத்தியில் தோழமையுடன் ஒன்றாக உணர்வுடன் விசுவாசமாக வேலைசெய்தவர்கள் சுரேஸ் பிறேமச் இன்பதவி மோகத்தால் இரண்டாக்கப்பிரிந்த நிலையிலும்  டக்ளஸ் தேவானந்தாவின் வலதுகையாக  விளங்கிய றமேஸ் நடராஜா சுரேஸ் பிறேமச்சவின் கட்டளைக்கு அமைய   கோப்பாயில் வைத்து கடத்தப்பட்டு இயக்கத்திற்குள் அராஐகம் கட்டவிழ்த்து ஆரம்பிக்க முக்கியமானவர்கள் பலர் வெளியேறினார்கள்.
சுரேஸ் பிறேமச் புலிகளுக்கு சலஞ்விட்ட கதையை சொல்லித்தான் ஆகவேணும்.  ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினால் ஈழம் தபால் முத்திரையை அச்சிட்டு வெளியிடும் விழா யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. அந்தவேளையில் டெலோ இயக்கம் புலிகளினால் தடைசெய்யப்பட்டுவிட்டது. இந்த கூட்டத்தில சுரேஸ் பிறேமச் ஆவேசமாக புலிகளைத்திட்டி ஏலும் எண்டா புலிகள் எங்களுடன் மோதட்டும் பார்ப்போம். என்று  சலஞ்விட்டார். பின்னர் புலிகளும்  ஈ.பி.ஆர்.எல் இயக்கத்தை தடைசெய்ய  பலர்கைதுசெய்யப்படநிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வைமன்றோட் புலிகளின் முகாமில் நூற்றுக்கணக்காண  ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
சிலர் துப்பாக்கிக்; குண்டுகாயங்களுடனும் சிலருக்கு பின்னால் உள்ள மாமரத்துடன் கட்டிவைக்கப்பட்டு கட்டில் சட்டத்தால் தாக்கப்பட்டு கால்கள்’ முறிக்கப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட வேதனை தாங்கமுடியாமல்  முனங்கிக்கொண்டிருந்தவேளையில்  அப்போது புலிகளின் தளபதி கிட்டுவின் மெய்ப்பாதுகாவலரும் நம்பிக்கைக்குரியவரும் யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையைச் சேர்ந்த நெல்சன் பட்டாளங்களுடன்  அங்கு வந்தான். அங்கு வந்தவன் சொன்னான் டேய் உங்கட ஆக்கள் மூன்றுபேரை இப்பதான் மானிப்பாயிலை போட்டுட்டு அதாவது கொலைசெய்துவிட்டு வந்தனான் துவக்கை தொட்டுப்பாருங்கடா சுடுகுது எண்டான்.
முன்னர் தனது வாக்கிடோக்கியின் சத்தத்தை கூட்டிவிட்டு  ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகளிடம் கேளுங்கோடா உங்கட பிறேமச்சந்திரன் எங்கட அலைவரிசைக்குள்ள புகுந்து கதைக்கிறான் மறுமுனையில்  சுரேஸ் பிறேமச் சொல்லுகிறார் டேய் நாங்கள் சாவகச்சேரியில் இருக்கிறம் துணிவு இருந்தால் வாங்கடா பார்ப்போம் என்று சலஞ் விட நெல்சன் தூசணத்தால் கேட்கிறான் டேய் சாவகச்சேரியில எந்த இடத்திலை இருக்கிறாய் இந்தா வருகிறம் எண்டான். சுரேஸ் பிறேமச்சின் சலஞ்சினால் சிறைவைக்கப்பட்ட போராளிகளுக்கு மேலும் மரணபீதி ஏற்பட்டது. புலிகளுடன் சலஞ்விட்டு ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டு எப்படியோ தான்மட்டும் கொழும்புக்கு தப்பி ஒடிவிட்டார். நெல்சன் சுவிஸ்நாட்டிற்கு சென்று தற்போது கனடா மொன்றியலில் இருப்பதாககேள்வி.
அறிவு இல்லாதவன் புலியிடம் சென்று இருப்பான் சொன்னார் சுரேஸ் பிறேமச்   இலங்கை-இந்திய ஒப்பந்த காலகட்டத்தில் கட்டாய ஆள்சேர்ப்புக்காக இளைஞர்கள் பிடிக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் அசோகா விடுதியில் பெற்றோர்கள் பிடிக்கப்பட்ட பிள்ளைகளை விடுவிப்பதற்காக படை எடுத்த போது சுரேஸ் பிறேமச் அந்தபெற்றோருக்கு பதில்சொல்லி எப்படியாவது அனுப்பிவிடுவார். அப்போது ஒருதாய் தனதுமகன் சின்னப்பெடியன் அறிவில்லாதவன் ஆளைவிட்டுவிடுங்கள் என்று கேட்டதற்கு அறிவில்லாதவன் எண்டால் புலிகளிடம் சென்று இருப்பான் என்று பல பேர் முன்னிலையில் கோபத்துடன் பதில் அளித்து தாயை திருப்பி அனுப்பிவிட்டடார். ஆனால் இந்த அறிவில்லாத புலிகளிடம் சென்றுதான் சுரேஸ் பிறேமச் எம்.பி. பதவி பெற்றுக்கொண்டார்.
தொடரும்…
அனுபவன்

No comments:

Post a Comment