Tuesday, September 25, 2012
இலங்கை::ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு சென்றுள்ளார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவையின் ஏற்பாட்டிலான மாநாட்டில் 'சிறுபான்மை சமூகமொன்றை வழிநடாத்துதல் - இலங்கை அனுபவம்' எனும் தொனிப்பொருளில் தலைமைத்துவம் பற்றிய சிறப்புரையை அமைச்சர் ஹக்கீம் நாளை புதன்கிழமை ஆற்றவுள்ளார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவை இஸ்லாமிய உலகில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அண்மைக் காலமாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு, முஸ்லிம் உலகிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் தொடர்பாடலை பொறுத்தவரை ஓர் இணைப்புப் பாலமாகவும் உள்ளது.
இதன் ஐரோப்பிய செயலகம் லண்டன் நகரிலும், ஆசிய நாடுகளுக்கான செயலகம் மலேஷியா கோலாலம்பூர் நகரிலும் அமைந்துள்ளன.
இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சர்வதேச சட்ட ஆலோசனை குழுவின் ஆறாவது அமர்வில் இலங்கையின் சார்பாக அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி அமைச்சர் ஹக்கீம் நாடு திரும்பவுள்ளார்

No comments:
Post a Comment