Wednesday, September 26, 2012
இலங்கை::தலங்கம,ஜயந்திபுர பிரதேசத்தில் போலி டொலர்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 300 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாராளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்...
அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாவலப்பிட்டி பகுதியில் அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கியொன்றுடன் கைதுசெய்யப்பட்ட இருவர் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். ..
இலஞ்சமாக மதுபான போத்தல்; சார்ஜன் கைது!
மதுரங்குளி பொலிஸ் காவலரணில் சார்ஜன் ஒருவர் இலஞ்சமாக மதுபான போத்தலொன்றை பெற்றுக்கொள்ளும் போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சார்ஜன் முச்சக்கர வண்டியொன்றை தரித்து வைக்க அனுமதியளிப்பதற்கு நேற்று மாலை நான்கு மதுபான போத்தல்களை இலஞ்சமாகக் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் இரண்டு போத்தல்களை நேற்று பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment