Monday, September 24, 2012
சென்னை::இலங்கை தமிழர் பிரச்னை குறித்து அனைத்து மாநில மொழிகளில் சிடி தயாரித்து மக்களிடம் கொண்டு செல்லப்படும் என்று வைகோ தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் சாஞ்சியில் நடந்த புத்தர் கோயில் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அவருக்கு கருப்புக் கொடி காட்ட தொண்டர்களுடன் சாஞ்சிக்கு வைகோ சென்றார். மத்திய பிரதேச எல்லையிலேயே தடுக்கப்பட்டதால், அங்கேயே போராட்டம் நடத்தி கைதானார்.
பின் விடுவிக்கப்பட்டார்.வைகோவும் தொண்டர்களும் நேற்றிரவு சென்னை திரும்பினர். அவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கிய பின் வைகோ பேசியதாவது: ராஜபக்சேவை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்தால் பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநில மக்களுக்கு இலங்கை பிரச்சனை குறித்தும், இலங்கையில் நடைபெற்ற இன படுகொலை குறித்தும் அந்தந்த மாநில மொழிகளில் சிடி தயாரித்து அந்த மக்களுக்கு கொண்டு செல்வோம்.

No comments:
Post a Comment