Friday, September 28, 2012
காத்மண்டு::நேபாளத் தலைநகர் காத்மண்டிலிருந்து எவரெஸ்ட் சிகர பகுதிக்கு இன்று காலை புறப்பட்ட விமானம் திடீரென தீப் பிடித்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 19 பேரும் பலியாகியுள்ளனர்.
காத்மண்டு விமான நிலையத்திலிருந்து சிதா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் 16 பயணிகள் மற்றும் 3 விமான நிறுவன ஊழியர்களுடன் எவரெஸ்ட் சிகர பகுதியான லுக்லா நகரை நோக்கி சென்றது. லுக்லாதான் எவரெஸ்ட் சிகரப் பகுதிக்கு செல்வதற்கான நுழைவு வாயிலாகும். விமானம் புறப்பட்ட 2-வது நிமிடத்தில் திடீரென விமானத்தில் தீப்பிடித்தது. விமான நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் தீப்பிடித்த விமானம் வெடித்து சிதறியது.
விமானத்தில் இருந்த 19 பயணிகளும் பலியாகினர். விமானம் தீப் பிடித்தபோது அருகில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையோரத்தில் பாதுகாப்பாக இறக்க விமானி முயற்சித்திருக்கிறார். ஆனால் அம்முயற்சி பலனளிக்காமல் விமானம் வெடித்திருக்கிறது.
இந்த விமான விபத்தில் 4 நேபாள நாட்டவர் உயிரிழந்திருக்கின்றனர். மற்றவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பயணிகள் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு ராணுவம் விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:
Post a Comment