Sunday, September 23, 2012

இலங்கை அகதி முகாமில் உள்ள மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம்!

Sunday, September 23, 2012
புழல்::புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 640 மாணவ, மாணவிகளுக்கு சென்னை எழும்பூரில் உள்ள  எழிலர் மறுவாழ்வு கழகத்தின் மூலம் நேற்று இலவச நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

விழாவுக்கு, இலங்கை அகதிகள் முகாம் வருவாய்த்துறை ஆய்வாளர் இளவரசி தலைமை தாங்கி, நோட்டு புத்தகங்களை வழங்கி பேசும்போது, அகதி முகாமில் படிக்கும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் முகாமில் உள்ள மற்றவர்களுக்கும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார். விழாவில், மறுவாழ்வு அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக், ரோசரி கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment