Monday, August 27, 2012குன்னூர்::இந்தியாவில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று குன்னூரில் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி முகாமுக்குள் நுழைய முயன்ற போது, நாம் தமிழர் கட்சியினருக்கும், போலிஸாருக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 15 நிமிடம் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தள்ளியதில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, முகாமுக்குள் நுழையு முயன்ற 30 பேரும் கைது செய்யப்பட்டனர்...
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி : குன்னூரில் தேமுதிக சாலை மறியல்!
குன்னூர், ஆக., 27 : ஊட்டியில், இலங்கை ராணுவ வீரர்கள் இரண்டு பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து குன்னூர் மாவட்டம் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாம் பகுதியில் தேமுதிகவினர் சாலை மறியல் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிளாக்பிரிட்ஜ் பகுதியில் தேமுதிக மாவட்ட செயலாளர் சாந்தி ராமு தலைமையில் கூடிய தேமுதிகவினர், ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலிஸார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் அருகில் இருந்த சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலிஸார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment