Friday, August 24, 2012

ஹெரோய்ன் வைத்திருந்த நால்வருக்கு ஆயுட்கால சிறை

Friday, August 24, 2012
இலங்கை::ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.

குறித்த நால்வரும் 52 கிராம் எடையுள்ள ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கொழும்பு பாலத்துறை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment