Monday, July 02, 2012
சென்னை::இலங்கையில், இறுதி கட்ட போருக்குப் பின், தமிழக அகதிகள் முகாமில் தங்கியுள்ள, இலங்கைத் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழக அகதிகள் முகாமிலிருந்து 1,557 குடும்பங்களைச் சேர்ந்த 5,058 பேர், சொந்த நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கையிலிருந்து, தமிழர்கள் அகதிகளாக வருவது முற்றிலுமாக நின்றுபோயுள்ளது. இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்த மோதலால், லட்சக்கணக்கான தமிழர்கள், அகதிகளாக தமிழகத்துக்கு திரும்பினர். கடந்த 1983ம் ஆண்டில், மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, 3 லட்சத்து 4,080 தமிழர்கள், அகதிகளாக மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். அதன்பிறகு பல்வேறு கால கட்டங்களில், அகதிகள் வருகை கணிசமாக இருந்தது. 2009ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போருக்குப் பின், குறிப்பிட்ட ஒரு சிலரே தமிழகம் வந்துள்ளனர். 112 அகதிகள் முகாம்:தமிழகத்தில், 26 மாவட்டங்களில், 112 அகதிகள் முகாம்கள் மற்றும் இரண்டு சிறப்பு முகாம்களில், தற்போது, 67 ஆயிரத்து 930 இலங்கை தமிழர்கள், அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மறு வாழ்வு தொடர்பான பணிகளை, அகதிகள் மறுவாழ்வு ஆணையரகம் செய்து வருகிறது.இந்த ஆணையரகம் மூலமே, அகதிகள் இங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். சிலர், தூதரகம் மூலமாக, தாங்களே விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை எடுத்து, ஒருமுறை விசா மூலம், இலங்கை சென்று சேர்கின்றனர்.
திரும்புவோர் அதிகரிப்பு:கடந்த, 2002ம் ஆண்டில் இருந்து, இந்தாண்டு மே மாதம் வரை 3,138குடும்பங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 594 பேர், இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இறுதிகட்ட போரில், புலிகள் வீழ்த்தப்பட்ட நிலையில், இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வேகம் பிடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 1,557 குடும்பங்களைச் சேர்ந்த, 5,058 தமிழர்கள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து, அகதிகள் மறுவாழ்வு ஆணையரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமெரிக்க நிறுவனம் மூலம், இலங்கை செல்பவர்களுக்கு, இலங்கையில் இறங்கியதும், அந்த நிறுவனம், குறிப்பிட்ட அளவு இலங்கை பணமும், அவர்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், படுக்கைகள், கொசுவலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி, அவர்களை குடியமர்த்த, தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சுயஉதவிக்குழுக்கள்:தற்போது, இலங்கையில் இருந்து, அகதிகளாக யாரும் வரவில்லை. இங்குள்ள முகாம்களை பொறுத்தவரை, உள்ளூர் மக்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்பட்டு வந்த, பல நல உதவிகளும், முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளன.அங்குள்ள பெண்கள் மத்தியில், 416 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவர்களுக்கான வங்கி நிதியுதவி பெற்றுத் தருதல், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை, வெளியில் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.''இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் கல்லூரிகளோடு ஒப்பந்தம்: முகாம்களில் வாழும், இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கான படிப்புகள் அனைத்தும், இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பை பொறுத்தவரை, கோர்ட் உத்தரவுப்படி, பொறியியல்
கலந்தாய்வு மூலம், பொது ஒதுக்கீட்டில், இலங்கை மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்தாண்டு 14 பேர், கலந்தாய்வு மூலம் தேர்வாகியுள்ளனர். தனியார் கல்லூரியில், ஒன்பது பேர் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு, 38 பேர் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, அகதிகள் மறுவாழ்வு ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ""முகாம்களில் வசிக்கும் சிறந்த மாணவர்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான கல்வி உதவி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தனியார் கல்லூரிகளில் இலவச கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு, சில கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:
Post a Comment