Sunday, July, 01, 2012
சென்னை::தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இலங்கை கடற்படை மீது, தமிழக போலீசார் தொடர்ந்துள்ள கொலை மற்றும் தாக்குதல் வழக்குகளை தமிழக அரசு தூசி தட்டி எடுக்கிறது. மேலும், கச்சத் தீவு தொடர்பாக, இலங்கையுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை தீவிரப்படுத்தவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. "சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க வருவதால் தாக்குதல்
நடத்தினோம்' என, இலங்கை அரசு கூறி வருகிறது.
400 பேர் சுட்டுக்கொலை : கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 400 பேரை, இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றதாக ராமநாதபுரம், மண்டபம், மணல்மேல் குடில், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஏழு கடலோர காவல் நிலையங்களில், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் மீது கொலை தாக்குதல் நடத்தியது; காயப்படுத்தியது; படகுகள், மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியது என, இலங்கை கடற்படை மீது 250 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளளது. இந்த வழக்குள், இதுவரை விசாரிக்கப்படாமலே உள்ளன.
கச்சத்தீவு விவகாரம் : இதுதவிர, இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை, இலங்கை அரசுக்கு, இந்தியா தானமாக கொடுத்துள்ளது. இருந்தாலும், கச்சத் தீவில் மீன் பிடி வலைகளை உலர வைக்கவும், ஓய்வு எடுக்கவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், கச்சத் தீவு பகுதிக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு : இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தானமாக கொடுத்தது செல்லாது என உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
இலங்கை கடற்படை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதைத் தடுக்கவும், எதிர்காலத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்க இந்த வழக்குகளை தீவிரப்படுத்தி ஆணைகளைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை கடற்படை மீதான வழக்குள் குறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசின் அறிவுத்தல்படி, வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன' என்றார். இலங்கை கடற்படை மீதான வழக்குகள் மற்றும் கச்சத்தீவு தொடர்பான சுப்ரீம் கோர்ட் வழக்கு ஆகியவற்றை துரிதப்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என, தமிழக அரசு நம்புகிறது.
தண்டிக்க வழியுண்டு! : தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது: இந்தியாவுக்கு சொந்தமான பகுதியை, மூன்றாம் நபர்களுக்கு தானமாக கொடுக்கவோ, விற்பனை செய்யவோ இந்திய அரசு உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்குவங்கத்தில் உள்ள தீவை, வங்கதேசத்துக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்தபோது, அம்முயற்சி தடுக்கப்பட்டது. கச்சத் தீவை இலங்கை அளித்தது செல்லாது என்பது, இந்த அடிப்படையில் தான் வலியுறுத்தப்படுகிறது. அதேபோல், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் தொடர்பான வழக்குகளில், இலங்கை கடற்படையினரை, தமிழகம் கொண்டு வந்து விசாரணை நடத்தி தண்டிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment