Monday, July 02, 2012
இலங்கை::வருடத்தின் இதுவரையான காலத்தில் எச்.ஐ.வி. எயிட்ஸ் தொற்றுக்குள்ளான ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதுவரை நாட்டில் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான ஆயிரத்து 350 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக எயிட்ஸ் ஒழிப்பு மற்றும் தேசிய பாலியல் நோய்கள் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நிமல் எதிரிசிங்க குறிப்பிட்டார்.
ஆயினும் நாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகளின் மூவாயிரத்து 500க்கும் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எயிட்ஸ் தொற்றுக்குள்ளாவதை தடுப்பது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் செயற்றிட்டம் நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக விசேட வைத்தியர் நிமல் எதிரிசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment