Wednesday,June,13,2012இலங்கை::எலிஸபெத் ராணியின் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரிட்டனுக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு எதிர்கொண்ட அனுபவம் மற்றும் முகங்கொடுத்த ஆர்ப்பாட்டம் என்பவை அவருக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. இது முழுநாட்டுக்குமே அவமானம் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இன்று கூறினார்.
ஸ்ரீலங்காவின் அரச தலைவர் என்ற முறையிலேயே ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தலைவராக அங்கு செல்லவில்லை' என ஜயசூரிய செய்தியாளர் மாநாட்டினபோது தெரிவித்தார்.
எனவே ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமானத்தை முழுநாட்டுக்குமே ஏற்பட்ட அவமானமாகவே நாம் கருதுகின்றோம். நாம் வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாயினும் எந்தவித அரசியல் சார்புமின்றி நாம் இதை கூறவேண்டியுள்ளது' என அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் என்ன மட்டத்தில் யார் பங்குபற்ற வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டியது அரசாங்கம் என்பதால் இந்த நிகழ்வில் இலங்கை பங்குபற்றியமை தொடர்பில் தனது கருத்தை வெளியிட விரும்பவில்லையென அவர் கூறினார்.
"பல நாடுகள் தமது அரச தலைவர்களை அனுப்பவில்லை. சில நாடுகள் அமைச்சர்கள் மட்டத்திலேயே பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. ஜனாதிபதியின் குழுவில் பலர் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது போன்ற வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்க வேண்டியது வெளிவிகார அமைச்சின் பொறுப்பாகும்' என கருஜயசூரிய கூறினார்.
வெளிவிகார அமைச்சின் நடவடிக்கைகள் அரசியல் மயப்படுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார். திங்கட்கிழமை டெய்லிமிரரின் பிரதான செய்தியை மேறகோள் காட்டிய கருஜயசூரிய, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தின் ஜுன் அமர்வுபற்றி ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதிக்கு எதுவும் தெரியாதுள்ளது எனக் கூறினர்.
அதிகாரிகள் மனமுடைந்து போயுள்ளனர். பொருத்தமில்லாத நியமனங்கள் காரணமாக சகல பிரிவுகளும் தரங்கெட்டுப் போயுள்ளன' என அவர் கூறினார். அரசாங்கம் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
"நாம் எமது நாடு ஜனநாயக நாடு என பெருமை பாராட்டுகின்றோம்' நாம் ஜனநாயக தத்துவங்களை கடைப்பிடிக்கின்றோமா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். பேச்சு சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு சுநத்திரம் என்பவை மறுக்கப்படுவதாக சர்வதேச ரீதியில் எம்மீது குற்றம் சாட்டப்படுகிறது" என அவர் கூறினார்.
ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி குறிப்பிட்ட அவர், "குற்றவாளிகள் இன்னும் சுந்திரமாக திரிகின்றனர் என்றார். முன்னாள் சட்டமா அதிபர், காணாமல்போன பத்திரிகையாளர் பற்றி கொடுத்த விளக்கம் பலராலும் கிண்டல் செய்யப்படுகின்றது" என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment