Saturday, June 2, 2012

டெல்லியில் நாளை போராட்டம் : ராம்தேவுக்கு போலீஸ் அனுமதி!

Saturday, June, 02, 2012
புதுடெல்லி::டெல்லியில் நாளை போராட்டம் நடத்த யோகா குரு ராம்தேவுக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக டெல்லியில் ஜூன் 3ம் தேதி ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் யோகா குரு ராம்தேவ் அறிவித்தார். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என ராம்தேவ் ஆதரவாளர்கள் டெல்லி போலீசுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ராம்தேவ் போராட்டத்துக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்பதால் அவ்வளவு பெரிய கூட்டத்தை ஜந்தர் மந்தர் தாங்காது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராம் லீலா மைதானம் அல்லது வேறு இடத்தை ஒதுக்கி தருமாறு ராம்தேவ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த டெல்லி போலீஸ், நாடாளுமன்ற தெருவில் போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 5 ஆயிரம் பேருக்கு மேல் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 20 கம்பெனி துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் நிறுத்த டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment