Sunday, June 10, 2012

இந்தியா பாக். அமைச்சர்கள் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை!

Sunday, June, 10, 2012
புதுடெல்லி::இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ரபானி கர், இந்தியா வந்தார். இங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். தீவிரவாதம், சியாச்சின், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்கிறது. இதற்காக, அடுத்த மாதம் 17, 18 தேதிகளில் எஸ்.எம்.கிருஷ்ணா இஸ்லாமாபாத்தில் சுற்றுப்பயணம் செய்வார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்புக்கு முன்னதாக இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடக்கிறது.

No comments:

Post a Comment