Thursday,June,14,2012இலங்கை::இலங்கை மக்கள் (புலி சார்பு) இணையத்தளங்களின் பொறுப்பற்ற செயற்பாட்டை நம்பி ஏமாறக் கூடாது!;-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்யெர்ந்த நூற்றுக்கணக்கா னோருக்கு அரசாங்கம் இதுவரையில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு நடவடிக்கைகளையோ, அவர்களுக்கான நெறியான வாழ்வாதார செயற்பாடுகளையோ மேற்கொள்ளவில்லை என்று சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் போலியாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கொண்டு வந்து பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டி ருக்கும் இவ் வேளையில், அரச எதிர்ப்பு சக்திகளும் அரசியல் குப்பைக்கூடையில் தூக்கி எறியப்பட்ட சில எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசியல் வாதிகள் சமூகத்துக்கு தீங்கிழைக்கும் போலியான வதந்திகளைப் பரப்பும் (புலி ஆதரவு9
இணையத்தளங்களிடம் மண்டியிட்டு அவற்றின் உதவியை நாடிவருவ தாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அரசாங்கத்தை எதிர்த்து உள்நாட்டில் சட்டபூர்வமான ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்காது என்ற உண்மையை உணர்ந் திருக்கும் சில தீய சக்திகளும், அரச விரோத அணிகளும் இப்போது நாடெங்கிலும் வதந்திகளைப் பரப்பும் பாரிய தேசத்துரோக குற்றத்தை செய்துக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
திடீரென்று ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும், பல அமைச்சர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என் றெல்லாம் வதந்திகளை இந்த இணையத்தளங்களின் ஊடாக இத்தீய சக்திகள் பரப்பி வருகின்றன.
இந்த இணையத்தளங்களை மக்களுக்கு உண்மையான தகவல்களைக் கொடுத்து உதவும் இணையத்தளங்களாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவற்றை சேற்றை அள்ளி வீசும் இணையத் தளங்க ளாகவே நாம் கருத வேண்டும் என்று வெகுஜன ஊடக தகவல் துறை அமை ச்சின் செயலாளர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் தகவல் மற்றும் தொடர்பாடல் ஆணைக்குழுவின் ஊடாக இந்த இணையத் தளங்களை தடை செய்வதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தகைய இணையத்தளங்களில் வெளிவரும் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு எவரும் சட்டபூர்வமாக முன்வரு வதில்லை. அதனால் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் தோன்றாது என்ற ஒரு நம்பிக்கையில் சில கோழைகள் இத்தகைய இணையத் தளங்களை நடத்தி அரசாங்கத் தலைவர்கள் மீதும் தாங்கள் விரும்பாதவர்கள் மீதும் சேற்றை அள்ளி வீசுகின்றார்கள்.
இதுபற்றி மேலும் விளக்கம் அளித்த வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சின் செயலாளர், நாம் ஊடக சுதந்திரத்தை தடை செய்ய விரும்பவில்லை. அவை நன்நெறியைக் கடைபிடித்து உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ செயற்படுவதையும் நாம் எதிர்க்கவில்லை. எனினும் இந்த ஒவ்வொரு இணையத்தளமும் எமது அமைச்சின் கீழ் பதிந்து கொள்ள வேண்டும். அப்போது அந்த இணையத்தளங்கள் ஏதாவது நியாயம் அற்ற முறையில் போலித் தகவல்களை வெளியிட்டு வந்தால் அவற்றின் பொறுப்பாளர்களிடம் அமைச்சுக்கு விளக்கம் கோரும் உரிமை இருக்கும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே வெகுஜன ஊடக தகவல் துறை அமைச்சில் பல இணையத் தளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை தங்குதடையின்றி தங்கள் சேவையை தொடர்ந்தும் நடத்தலாம். அதற்கு அமைச்சு எவ்வித தடையும் விதிக்கப் போவதில்லை என்று தெரிவித்தார். அதேவேளை யில் பொறுப்பற்ற முறையில் சேற்றை அள்ளி வீசும் இணையத்தளங் கள் செயற்படுவதற்கு நாம் அனுமதி அளிக்க முடியாது என்றும் கூறினார்.
சில இணையத்தளங்கள் இவ்விதம் பொறுப்பில்லாமல் செய்திகளைத் திரிபுபடுத்தியும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதும் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஒரு தரம் குறை ந்த செயல் என்று நாம் கருதுகின்றோம். பத்திரிகைகள் அல்லது இலத் திரனியல் ஊடகங்களில் ஒருவருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர் அது குறித்து ஆட்சேபம் தெரிவித்து அந்த செய்தியை திருத்தி பிரசுரியுங்கள் அல்லது ஒலிபரப்புச் செய்யுங்கள் என்று கேட்கலாம். அவ்விதம் செய்யத் தவறும் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்குத் தொடருவதற்கும் இலங்கையில் அரசியல் சாசனம் இடமளிக்கின்றது.
இத்தகைய செயற்பாடுகள் மூலம் எங்கள் நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் காப்பாற்றி பொது மக்களுக்கு, சட்டம் பாதுகாப்பை அளிக்கின்றது. இவ்விதம் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளும் தங்க ளின் பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் அரசாங்கத்துக்கு அளி ப்பது அவசியமாகும்.
எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற ஜனநாயக உரிமையை சரியான முறையில் பயன்படுத்தி அரசாங்கம் செய்யும் பிழைகளை குறிப்பிட்டும் அல்லது செய்யாதிருக்கும் சில செயற்பாடுகள் குறித்து எதிர்ப்புத் தெரிவித்தும் நாட்டில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், பொதுக் கூட்டங்க ளையும் நடத்துவதற்கான பூரண சுதந்திரம் அவற்றுக்கு இருக்கின்றது.
அவ்விதம் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டி அவற்றில் மாற்றங்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமே எங்கள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை நாம் பேணிப் பாதுகாக்கலாம். அதற்குப் பதிலாக சில சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இணையத் தளங்களிடம் சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மண்டியிட்டு அரசாங்க த்துக்கு எதிராக சேற்றை அள்ளி வீசுமாறு கேட்பது ஜனநாயக சுதந்திரத்துக்கு தீங்கிழைக்கும் செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். (tk)
No comments:
Post a Comment