Thursday, June 14, 2012

கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் இன்று பதவிகளை பொறுப்பேற்பு!

Thursday, June, 14, 2012
இலங்கை::கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலீஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பூஜித ஜெயசுந்தர இன்று (14.6.2012) காலை தனது கடமைகளை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலீஸ் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றக்கொண்டார்.
புதிய சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்கும் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலீஸ் மா அதிபர் செனவிரட்ன, மற்றும் மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர், உதவி பொலீஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, உட்பட உதவி பொலீஸ் அத்தியட்சகர்கள், பொலீஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மதப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடமைகளை பொறுப்பேற்கும் முன்னர் பொலீஸ் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றது. இதையடுத்து சமயப்பிரமுகர்களின் ஆசியை பெற்றுக்கொண்ட பின்னர் புதிய சிரேஷ்ட பிரதிப்பொலீஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடமேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப்பொலீஸ் மா அதிபராக கடமையாற்றிய பூஜித ஜெயசுந்தர கிழக்கு மாகாணத்தக்கான பிரதிப்பொலீஸ் மா அதிபராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment