Friday, ,June, ,15, ,2012சென்னை::இலங்கையில் நடத்திய விழாவுக்காக, ராஜபக்சேவிடம் பண உதவி பெறவில்லை என்று பாரதியார் சங்கம் அறிவித்துள்ளது. பாரதியார் சங்க தலை வர் மூத்த வக்கீல் ரா.காந்தி, துணை தலைவர் டாக்டர் ராஜா, பொது செயலாளர் ரா.மதிவாணன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி: பாரதியார் சங்கமும், கொழும்பு தமிழ் சங்கமும் இணைந்து கடந்த 1ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் பாரதியார் விழாவை நடத்தியது. இந்த விழாவுக்காக இலங்கை அரசிடமிருந்தோ, அதிபர் ராஜபக்சேவிடம் இருந்தோ பணம் உள்ளிட்ட எந்த உதவியும் பெறவில்லை.
ஆனால், தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகை யில், மதிமுக பொது செய லாளர் வைகோ, புலவர் புலமைப்பித்தன் உள்பட 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள், படைப்பாளிகள் வெளியிட்ட அறிக்கை யில் மாநாட்டுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர். இதில், எந்தவித உண்மையும் இல்லை. 2011ல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தெரிவித்த எதிர்ப்பு அலைதான் மீண்டும் எழுந்திருக்கிறது.
இலங்கையில் பாரதி யார் புகழை பரப்புவதற்காக மட்டுமே சென்றோம். இலங்கை சென்ற 35 பேரும் தங்களுடைய சொந்த பணம் 20 ஆயிரத்தை செலழித்துதான் சென்றனர். இந்த நிலையில், இலங்கை சென்றவர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என்று வைகோ உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். இது அநாகரீக செயலாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment