Monday, June, 11, 2012இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் கைதுசெய்யபட்டுள்ளனர். எனினும், அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்ற விடயம் தெரியவரவில்லை.இஸ்ரேலிய பொலிஸார் நடத்திய சோதனையின்போது இவர்கள் உட்பட்ட தென் சூடான், நைஜீரியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளின் சுமார் 150 அகதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இஸ்ரேலின் உள்துறை அமைச்சில் தம்மை பதிவு செய்துக்கொள்ளாமை காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக, இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் எலி இசாய் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் ஒரு வாரத்துக்குள் சுயமாகவே இஸ்ரேலை விட்டு வெளியேறுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment