Friday, June 15, 2012

பெண் கைதிகளுக்கு தொழிற்பயிற்சித் திட்டம்!

Friday, June, 15, 2012
இலங்கை::வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளைச் சேர்ந்த பெண் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் கைதிகளுக்கான தொழில் பயிற்சிகளை வழங்குமாறு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கமைய தையல், அழகியற்கலை, பனைசார் கைவினைப் பொருட்கள் உற்பத்தி, பேக்கரி உற்பத்தி உள்ளிட்ட பயிற்சிகள் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ் குமார் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுமார் நான்காயிரம் பெண் கைதிகள் இருப்பதாகவும் ஏற்கனவே பல சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment