Thursday, June 28, 2012இலங்கை::இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல் தொடர்வதாக ஊடக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை சில தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஊடக சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் முக்கிய ஐந்து ஊடக அமைப்புக்கள் கொழும்பில் நேற்று நடத்திய ஊடவியலாளர் சந்திப்பின்போது அவற்றின் பிரதிநிதிகளும் ஊடவியலாளர்களும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கை ஊடக அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்படாத இணையத்தளங்களை தடைசெய்வதற்கு தமக்கு அதிகாரம் இருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பொன்றின் அடிப்படையில் இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் பதிவுசெய்யப்பட வேண்டியது கட்டாய சட்டமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஊடகவியலாளர்கள் அரச புலனாய்வுப் பிரிவினரால் பின்தொடரப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர் மறுத்துள்ளதாகவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment