Sunday, June 10, 2012

புலி ஆதரவு ஊடகங்களால், அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் மீண்டும் ஓர் புறலி அம்பலம்!

Sunday, June, 10, 2012
இலங்கை::புலி பயங்கரவாத ஆதரவு ஊடகங்களால் இலங்கை அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் அடிப்படையற்ற வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி புறலியை ஏற்படுத்தும் இன்னுமோர் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

நாம் ஏற்கனவே கூறியதுபோல் கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் படுகொலை சம்பவத்தின் உண்மையான பின்னனி தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 3ஆம் திகதி இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் கொலைத்தொடர்பாக பல பயங்கரவாத ஆதரவு ஊடகங்கள் பாதுபாப்புப் படையினர் மீது குற்றம் சுத்தினர்.

இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் வெளியான தகவல்களின் படி, ஜே.ஆரணியா என்ற பெண்ணுடன் முறையற்ற காதல் தொடர்பு ஏற்றபட்டதன் மூலம், கொலைசெய்யப்பட்ட குறித்த நபரின் பணத்தை கொல்லையடிக்கும் நோக்கில், முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரால் இப் படுகொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை, இலங்கையை பிறப்பிடமாக் கொண்டதுடன், கணடா பிரஜாவுரிமை பெற்று அங்கு வசித்துவந்தார். கிளநொச்சி மாவட்ட, பரந்தன் குமரிக்குடா பகுதியிலுள்ள, தனது பண்ணையில் வீடொண்றை நிர்மாணிக்கும் முகமாக அடிக்கடி இலங்கைக்கு வந்துசெல்லும் ஒருவராவார். இவர் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் இவரது வசிப்பிடத்திற்கு அருகில் வசித்துவந்த யகுஞானம்( ராஜா என அழைக்கப்படும்) இவருக்கு நாளாந்த உணவுகளை வழங்கி வந்துள்ளார். அந்தோணிப்பிள்ளை வழமைப்போல் மார்ச் 3ஆம் திகதி இரவு 08.15 மணியளவில் உணவை உட்கொண்டு விட்டு தனது இருப்பிடத்தை நோக்கி திரும்பியுள்ளார். இவ் வேளையிலேயே இவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ராஜா பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி, தனது பெயரை ஒருவர் உரத்து அழைப்பதுபோல் இருந்ததாகவும், வெளியவந்த குறித்த இடத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது, ஒரு நபர் வெளியே வர வேண்டாம் என எச்சரித்ததாகவும், எனவே அவ்விடத்திற்கு செல்லாமல், கிளிநொச்சி கிராம சேவையாளர் நாகேந்திரன் அம்பகாபாலனுக்கு தொலைபேசி மூலம் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தாகவும், அவ்வேளையிலேயே(இரவு 8.15 மணியலவிலேயே), கிராம சேவையாளார் பொலிஸாருக்கு மேற்படி சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட உடனடி விசாரணையின் மூலம் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். பரந்தனைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர் ஏ.அகிலன்(27), வவுனியாவைச் சேர்ந்த ஏ.ஆனந்தராசா(22), என்.பாலேந்திரன்(24) மற்றும் பிரதீப்குமார்(20), மற்றும் ராஜாவின் மனைவியான ஜே.ஆரணி(26) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தவிர படுகொலை செய்யப்பட்டவரின் மடிக்கணணி, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பிகள் மற்றும் கோடாரி, தொலைபேசி போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவரது தொலைபேசியை சந்தேக நபர்கள் எரியூட்ட முயற்சித்துள்ளனர்.

சந்தேகநபரில் ஒருவரான அகிலன் என்பர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஆவார். இவர் வவுனியாவில் இடம்பெற்ற புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுள் ஒருவராவரார். கொலை செய்யப்பட்ட அந்தோணிப்பிள்ளை ஜயகுமார் உணவு உண்பதற்காக செல்லும் ராஜாவின் மனைவியான ஆரணியாவுடன் அகிலன் முறையற்ற கள்ள காதல் தொடர்பை பேணிவந்துள்ளார்.

ஆரணியாவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் படி, கொலை செய்யப்பட்ட அந்தோணிப்பிள்ளையுடன் பணம் சம்பந்தப்பட்ட சில பிரச்சணையை கொண்டிருந்த்தாகவும், அந்தோணிப்பிள்ளையிடம் 2 மில்லியன் ரூபா பணம் இருப்பதாக அகிலனிடம் கூறி அவரை கொலை செய்ய தூண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது. ஆரணியா மூலம் அந்தோணிப்பிள்ளை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விசாரணையின் மூலம் இதற்கு முன்னர் 3 தடவைகள் அந்தோணிப்பிள்ளையை கொலை செய்வதற்கு அகிலன் முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2012 மே 24ஆம் திகதி அனைத்து சந்தேக நபர்களும் ஆஜராக்கப்பட்டனர். இவ் வழக்கானது இல.22812 இன் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுகின்றது.

லண்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் மற்றும் கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமார் ஆகியோரது படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதலைப்புலி ஆதரவு ஊடகங்கள், எவ்வித உண்மை நிலையை பற்றி ஆராயாமல் உடனடியாக இக் கொலைகளுக் காரணம் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் தான் என பறைசாட்டினர்.

இவர்கள் இலங்கை அரசாங்கத்தால் அப்பாவி தமிழ்மக்களது வாழ்கைதரத்தை முன்னேற்ற மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தொடர்பாக கண்டுகொள்ளாவிடினும், இலங்கையின் உண்மை நிலைமையாது என இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் தெரியும்...

இது தொடர்பான செய்திகள் (6/7/2012)

அம்பலமாகும் புலிபயங்கரவாத ஆதரவு ஊடகங்களின் போலிக் குற்றச்சாட்டு!

அண்மைக்காலங்களாக பயங்கரவாத ஆதரவு ஊடகங்களில், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் மற்றும் இலங்கைக்கு வருகைதரும் தமிழர்கள், படுகொலை செய்யப்படுவதாகவும், இப் படுகொலைக்கு காரணம் பாதுகாப்புப் படையினர் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன.

எந்தவித ஆதரங்களும் அற்று இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி, இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கில் மேற்கொள்ளப்படும் இக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என தற்போது அம்பலமாகி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஈஸ்வரன் கேதீஸ்வரன் என்பவர் இனந்தெரியாதொரால் படுகொலை செய்யப்பட்டார். இவர் 2010ஆம் ஆண்டு லண்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவராவார்.

ஆனால் புலி ஆதரவு ஊடகங்களில் இவர் இராணுவத்தினராலே படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
உண்மையாதெனில், இலங்கைப் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, இப் படுகொலையின் பிரதான சந்தேகநபர், இங்கிலாந்தில் வசிக்கும் ஈஸ்வரன் கேதீஸ்வரன் மனைவியாவார் என கண்டறியப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 26 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 வயதான சந்தேகநபர் விமானி என தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர் ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் திருகோணமலையில் உள்ள தனது கணவரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரனை கொலை செய்ய சந்தேகநபருக்கு 1750பவுன் பணம் கொடுத்துள்ளார். இதன் பின்னணியிலேயே ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன், இவர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் ஈஸ்வரன் கேதீஸ்வரனின் மனைவியை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் நாம் தெளிவாக விளங்கிக் கொள்வது யாதெனில், சமாதானத்தை விரும்பாத விடுதலைப்புலி ஆதரவு ஊடகங்கள்,இலங்கையில் எங்காவது ஒரு படுகொலை நடந்தால் அது இராணுவத்தினராலே மேற்கொள்ப்பட்டதாகவும், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும் வீண் புறலியை ஏற்படுத்தி இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அயராது உழைத்து வருகின்றனர். இதன்மூலம் சர்வதேச சமூகத்தினதும், மனித உரிமை அமைப்பிகளினதும், மேற்கத்தைய அரசாங்களினதும்,

கவனத்தை திசைத்திருப்பி, இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதாகவும், மக்களை இலங்கைக்கு திருப்பி அனுபப்படுவதை தடைசெய்யவும் இம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இடம்பெறும் கொலைகள் மற்றும் கொல்லைகள் யாவும் சுய பிரச்சனைகளுக்கா மேற்கொள்ளப்பட்டு, பின்னர் இராணுவத்தினரின் பெயரை சாட்டி தப்ப முயற்சிப்பதும் தெளிவாகின்றன.

அதேவேளை கனடிய பிரஜாவுரிமை பெற்ற அந்தோனிப்பிள்ளை மஹேந்திரராசாவின் படுகொலை தொடர்பாகவும் விரைவில் அம்பலமாகும்.

எனவே இலங்கை தொடர்ந்து இப் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான உண்மையை கண்டறிய முயற்சி வண்ணமே இருக்கும்.

No comments:

Post a Comment