Friday, June 15, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 6-வது சுற்று முடிவில் அ.தி.மு.க. முன்னிலை!

Friday, ,June, ,15, 2012
புதுக்கோட்டை:: புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துகுமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 12-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 20 பேர் போட்டியிட்டனர்.

224 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,43,277 வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 69,259 பேரும், பெண்கள் 74,018 பேரும் வாக்களித்தனர். இது 73.48 சதவீதம் ஆகும்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 10 மேஜைகள் போடப்பட்டு 23 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6-வது சுற்று முடிவில் அ.தி.மு.க. 19444 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.

அ.தி.மு.க.- 28282; தே.மு.தி.க.- 8838

5-வது சுற்று

அ.தி.மு.க.- 22696; தே.மு.தி.க.- 7486; முன்னிலை- 15210

4-வது சுற்று

அ.தி.மு.க.- 17900; தே.மு.தி.க.- 6143; முன்னிலை- 11757

3-வது சுற்று

அ.தி.மு.க.- 13739; தே.மு.தி.க.- 4594; முன்னிலை- 9145

2-வது சுற்று

அ.தி.மு.க.- 8952; தே.மு.தி.க.- 2788; முன்னிலை- 6164

முதல் சுற்று

அ.தி.மு.க.- 4287; தே.மு.தி.க.- 1057; முன்னிலை- 3233

No comments:

Post a Comment