Tuesday, June 12, 2012

அத்வானி-14 எம்.பி.க்கள் நாளை சென்னை வருகை: கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பை பார்வையிடுகிறார்கள்!

Tuesday, June, 12, 2012
சென்னை::இந்தியாவில் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை எம்.பி.க்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது. அத்வானி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாராளுமன்ற குழுவில் மொத்தம் 15 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழு நாளை (13-ந்தேதி) இரவு சென்னை வருகிறது.

அத்வானி உள்பட எம்.பி.க்கள் அனைவரும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள். நாளை மறுநாள் கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்கிறார்கள். அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிடுகிறார்கள்.பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

அதை தொடர்ந்து மணலியில் உள்ள சி.பி. சி.எல். நிறுவனத்தையும் மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகளையும் எம்.பி.க்கள் குழு பார்வையிடுகிறது. இந்த ஆய்வு பணிகள் முடிந்தவுடன் 16-ந்தேதி (சனிக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

அத்வானி வருகையையொட்டி கல்பாக்கம், மீனம்பாக்கம் விமான நிலையம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அத்வானிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று நடந்தது. அதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment