Thursday, June 7, 2012

யுத்தம் முடிந்தவுடன் அரசாங்கம் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்திருக்க வேண்டும் - குணதாச அமரசேகர!

Thursday, June 07, 2012
இலங்கை::யுத்தம் முடிந்தவுடன் அரசாங்கம் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்திருக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு மாறாக அரசாங்கம் வேறு விடயங்களை செய்ததாகவும் இதனால் தேவையற்ற பிரதிபலன்களை இலங்கை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தமையானது அரசாங்கம் செய்த பெரும் முட்டாள்தனமான வேலை எனவும் அந்த ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டிருந்த சட்டத்தரணிகள் றகர் விளையாடுபவர்கள் எனவும் அவர்களுக்கு சட்டம் தெரியாது என்றும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் ஆணைக்குழுவை நியமித்தாலும், இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை பயன்படுத்தி, சல்வதேசம் இலங்கை மீது பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் இது பன்றியின் மீனை பன்றியின் உடலில் வைத்து வெட்வது போன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த அறிக்கை மூலம் நாமே எமது கழுத்தில் விலங்கிட்டு கொண்டோம் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்...

சம்பந்தனின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது – குணதாச அமரசேகர!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஆயுத போராட்டத்தின் மூலம் எட்ட முடியாமல் போன இலக்குகளை வேறும் வழிகளில் அடையவே சம்பந்தன் முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பந்தன் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்யும் போது அரசியல் சாசனத்திற்கு புறம்பாக செயற்படுவதில்லை, எதிராக கருத்து வெளியிடுவதில்லை என உறுதிமொழி அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சம்பந்தன் இந்த உறுதிமொழிகளை மீறிச் செயற்பட்டுள்ளளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்தை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என சம்பந்தன் அண்மையில் தெரிவித்துள்ளதாகவும், இது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment