Thursday, June 28, 2012இலங்கை::வான் ஒன்றில் சிறுமியை கடத்த முயன்ற 11 சந்தேகநபர்கள் ஹட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை ஹட்டன் பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஜீவ மெதவத்த அத தெரணவிடம் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் பயணித்த வானை பொலிஸ் சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இவர்கள் பயணித்த வானில் 16 வயது சிறுமி இருந்தது பொலிஸாரால் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment