Thursday, May 17, 2012

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்!

Thursday, May, 17, 2012
இலங்கை::கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டுள்ள தம்மை யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்மால் பல்வேறு தடவைகளில் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் அரசியல் வாதிகளின் உறுதிமொழிகளால் அவை கைவிடப்பட்டன.

இருப்பினும் இம்முறை வெறுமனே உறு திமொழிகளால் எம்மை ஏமாற்ற முயற்சிக் கக் கூடாது, மாறாக எமது விடுதலைக்கு வழிவகுக்க வேண்டுமென்றும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment