Wednesday,May, 16, 2012இலங்கை::தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
நேற்றுக் காலை அலரி மாளிகையில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்த சந்திப்பில், இலங்கையின் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். பரஸ்பர நம்பிக்கையையும் நட்புறவையும் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவது மிகவும் அவசியமென்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
விசேடமாக பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றிய படங்களுடனான சிறிய செய்திகளை கூட பெரிதுபடுத்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டு மென்றும், இவ்விதம் செய்வது பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களின் வன்முறைகளுக்கு மதிப்பளிக்கக்கூடியதாக அமையலாம் என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.
சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரி க்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி கூறினார்.
இலங்கையின் முன்னேற்றத்தையும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளையும் இனவாதம் சீர்குலைத்துவிடுவதன் காரணமாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஊடாக எந்தவிதத்திலும் இனவாத ஆக்கக்கூறுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாமென அனைத்து ஊடக தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இலங்கையிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதையே தான் பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment