Monday, May 28, 2012

தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் உயர் மட்டக் கூட்டத்தில் ஜூன் இறுதிக்குள் தொடங்க திட்டம் - சந்திரசிறி கஜதீர!

Monday, ,May, 28, 2012
இலங்கை::தமிழ் கைதிகளின் விசார ணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் உயர் மட்டக் கூட்டத்தில் முன்னெடுக்கப்ப ட்டிருக்கும் தீர்மானங்களின், ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஜூன் இறுதிக்குள் தொடங்குவ தற்கென துரித கதியில் வேலைத்திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

தமிழ் கைதிகள் விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பதாகவே நாம் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் முடிவு செய்திருந்தோம்.

அந்த செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கென மே 22 ஆம் திகதி மீண்டும் உயர் மட்டக் கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த வேளையிலேயே, இதனை நன்கு அறிந்து வைத்திருந்த சில அரசியல் வாதிகள் சுய இலாபம் தேடும் நோக்கில் தமிழ் கைதிகளை உண்ணா விரதமிருக்க தூண்டி விட்டிருந்தனர் எனவும் அமைச்சர் கஜதீர கூறினார்.

தங்களால்தான் தமிழ் கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப் பட்டது என்று பெயர் சூட்டிக் கொள் வதற்காக சிறைக் கைதிகளை உண்ணா விரதமிருக்க தூண்டி விட்டு இந்த அர சியல் வாதிகள் வேடிக்கை பார்த்தனரெனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கைதிகள் மீது இத்தனை அக்கறை கொண்டிருக்கும் இந்த சில அரசியல் வாதிகள் அவர்கள் தொடர்பில் பேச்சு நடத்தவோ மேற்படி கோரிக்கைகளை முன்வைக்கவோ என்றுமே என்னை சந்திக்க வரவும் இல்லை. தொடர்பு கொள்ளவும் இல்லை.

இந்த அரசாங்கம் அதாவது, ஆளுங் கட்சியே தமிழ் கைதிகளின் நலன் கருதி ஒவ்வொரு விடயங்களையும் கவனத்திற் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

மேற்படி கைதிகள் நீதிமன்றத்தினால் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள். அவர்கள் உண்ணாமல் இருக்கும் பட்சத் தில் அக்கைதிகளின் உடல் நலன் குறித்து பொறுப்புக் கூற வேண்டியது எமது கடமை. சிறைக் கைதிகள் உண்ணாவிரத மிருந்த ஓரிரு நாட்களிலேயே அவர்களது கோரிக்கை தொடர்பில் ஏற்கனவே நாம் ஆராய்ந்து வருகிறோமென எமது அதி காரிகள் அவர்களிடம் எடுத்துக் கூறியதை யடுத்து, பெரும்பாலானோர் தமது போராட்டத்தை கைவிட முன்வந்த போதும், வெளியிலுள்ள சில விஷமிகள் அதற்கு இடமளித்திருக்கவில்லை.

இதனை வெளிநாடுகளுக்கு பாரிய பிரச்சினையாக எடுத்துக்காட்ட வேண்டிய தேவை சிலருக்கு இருந்தமையே இதற்கான ஒரே காரணம்.

இறுதியாக உண்மையை புரிந்து கொண்ட தமிழ் கைதிகள் தமது போராட் டத்தை கைவிட்டு அமைச்சுக்கும் அரசாங் கத்துக்கும் நன்றி தெரிவித்து எமக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் களெனவும் அமைச்சர் கஜதீர மேலும் கூறினார்.

No comments:

Post a Comment